Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Thursday, 11 July 2019

வீட்டுச் சாப்பாடு - பெங்களூர் உணவகங்கள் -1


வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கியிருக்கும் போது ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துப் போயிருக்கும்போது சுவையான வீட்டுச் சாப்பாடு கிடைத்தால் எவ்வளவு அருமையாய் இருக்கும், எங்காவது வீட்டுச் சாப்பாடு கிடைக்காதா என்று தேடி அலைந்து கண்டுபிடித்தவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும். பெங்களூரில் மகாதேவபுரா பகுதியில் மெயின் ரோட்டிலிருந்து சிறிது தள்ளி இருக்கும் மகேஸ்வரம்மா டெம்பிள் ரோடில் கொஞ்சம்  உள்ளடங்கி இருக்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹோம்மேட் ஃபுட்ஸ். 



அன்று மதியம் கொஞ்சம் ஹெவியாக சாப்பிட்டு விட்டதால், இரவு 7 மணி இருக்கும் ஏதாவது லைட்டாக இட்லி, தோசை போன்ற டிபன் சாப்பிடலாம் என்று இந்த உணவகத்துக்கு சென்றேன், கையேந்தி பவன் போல் இல்லாமல் அதே சமயம் நட்சத்திர உணவகம் போலவும் இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட தோதாக மேஜை நாற்காலிகளுடன் ஒரு மிடில் கிளாஸ் உணவகத்துக்கான வசதிகளுடன் அமைந்திருக்கிறது இந்த உணவகம். 

(படத்தில் இருப்பது நானே தான் - பப்ளிசிட்டி பிடிக்காது அதனால் ஆப்ஸ் உதவியுடன் மாஸ்க்)

ஒரு செட் தோசை சொல்லிவிட்டு காத்திருக்கத் தொடங்கினேன், நம் கண் முன்னே சூடான தோசை கல்லில் தோசை மாவு வார்க்கப்பட்டு சுடச்சுட தோசைகள் தயாரானது, கார குழிப்பணியாரம், ராகி இட்லி, சப்பாத்தி, புளியோதரை  போன்ற ஸ்நாக்ஸ், வெரைட்டி ரைஸ், டிபன் ஐட்டங்களும் விற்பனைக்கு தயாராக இருந்ததை பார்க்க முடிந்தது.



தட்டில் இரண்டு வகை சட்டினி (தேங்காய் சட்டினி தக்காளி சட்டினி) , சாம்பாருடன் செட் தோசை பரிமாறப்பட்டது. தக்காளி சட்டினியில் தோசை துண்டுகளை தோய்த்து ஒவ்வொரு துண்டாக சாப்பிடத் தொடங்கினேன், சாம்பாருக்கும், தேங்காய் சட்டினிக்கும் வேலையே வைக்காமல் தக்காளி சட்டினியே மூன்று தோசைகளுக்கும் சிறந்த ஜோடியாக அமைந்து விட்டது, சில நிமிடங்களில் மூன்று தோசைகளும் தட்டிலிருந்து வயிற்றுக்கு இடம் மாறி விட்டது. 

நான் சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே அருகில் சிலர் சப்பாத்தி, குருமா, ராகி இட்லி வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். செட் தோசை சாப்பிட்டதிலேயே வயிறு நிரம்பி விட்டது, இன்னொரு நாள் சப்பாத்தி, ராகி இட்லி சாப்பிட்டுப் பார்க்கலாம் என்று எழுந்து விட்டேன். செட் தோசை நாற்பது ரூபாய் தான். மதிய நேரத்தில் வெரைட்டி ரைஸ், மீல்ஸும்  கிடைக்கிறது. மசாலா பொருட்களை அதிகம் சேர்க்காமல் வயிற்றுக்கு கேடு விளைவிக்காத சுவையான வீட்டுச் சாப்பாடு மிடில் கிளாஸ் பட்ஜெட்டில் சாப்பிட விரும்புபவர்கள் இந்த உணவகத்துக்கு தாராளமாக ஒரு முறை வந்து சாப்பிடலாம்.