பிரியாணி என்று சொன்னாலே, அதை ரசித்து, ருசித்து சாப்பிட்டு மகிழ்ந்தவர்களுக்கு நாவில் எச்சில் ஊறத் தொடங்கி விடும், கடைசியாக எங்கே எப்போது பிரியாணி சாப்பிட்டோம் என்று நினைவுகளை அசைபோடத் தொடங்கி விடுவார்கள், அதிலும் பிரியாணிக்கு என்றே உலகப் புகழ் பெற்ற ஹைதராபாத் பிரியாணியின் சுவையை பற்றியும், அதன் சுவைக்கு அடிமையாகி கிடக்கும் உணவுப் பிரியர்களை பற்றி சொல்லவும் வேண்டுமா? இப்படிப்பட்ட உணவுப்பிரியர்களின் தீராத ருசிப்புதன்மையால் உணவு நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மைல்கல்லை தொட்டு சாதனை படைக்கின்றன.
உணவுப் பொருட்களை வீடு தேடிச் சென்று டெலிவரி செய்வதில் சாதனை படைத்து வரும் சோமாட்டோ நிறுவனம் சமீபத்தில் அதன் டிவிட்டர் கணக்கில் வெளியிட்ட டிவீட் ஒன்று இணையத்தில் இப்போது செம வைரல் ஆகி வருகிறது, உங்கள் நகரத்தில் இருக்கும் எந்த உணவகத்தில் உணவை வாங்க இப்படி நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள் தெரியுமா? என்று கேள்வியுடன் ஹைதராபாத்தில் உள்ள ஒரு உணவக வாசலில் சோமாட்டோ டெலிவரி பணியாளர்கள் அன்றைய பிரியாணி ஆர்டர்களை டெலிவரி செய்ய பிரியாணி பார்சலைப் பெறுவதற்காக நீண்ட வரிசையில் நிற்கும் புகைப்படத்தையும் சோமாட்டோ நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது.
Which restaurant from your city deserves this kind of a queue? 🤔 pic.twitter.com/dua2Yge7C1— Zomato India (@ZomatoIN) April 10, 2019
பின்னர் அந்த புகைப்படம் ஹைதராபாத்தில் பிரியாணிக்கென்றே புகழ் பெற்ற பவார்ச்சி உணவகத்தின் வெளியில் எடுக்கப்பட்டது என்று பதிலையும் டிவிட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளது, ஒரு நாளைக்கு சோமாட்டோவிலிருந்து மட்டும் பவார்ச்சி உணவகத்துக்கு இரண்டாயிரம் பிரியாணி ஆர்டர்கள் குவிகிறது, இந்தத் தகவலை சோமாட்டோ நிறுவனம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையும் உறுதிப்படுத்துகிறது.
Oh BTW, this picture was taken outside Bawarchi restaurant in Hyderabad. The total number of orders they receive in a day will blow your mind: https://t.co/M5M6lEceNq— Zomato India (@ZomatoIN) April 10, 2019
சில வருடங்களுக்கு முன் நல்ல உணவு வகைகள் எந்த உணவகத்தில் கிடைக்கும் என்று உணவுப்பிரியர்கள் தேடிப் பிடித்து சாப்பிட்டு வந்தனர், இப்போது பிரபல உணவகத்தின் பிரியாணி வீடு தேடி வருகிறது என்றால் விடுவார்களா என்ன? நான் நீ என்று போட்டி போட்டு கொண்டு உணவுப்பிரியர்கள் தினமும் வரிந்து கட்டி கொண்டு ஆர்டர் செய்வதால் சோமாட்டோவிலிருந்து மட்டும் பவார்ச்சி உணவகத்துக்கு தினசரி இரண்டாயிரம் பிரியாணி ஆர்டர்கள் என்ற சாதனை சாத்தியமாகி இருக்கிறது. இனி வரும் காலங்களிலும் உணவுத்துறை சார்ந்த சோமாட்டோ போன்ற டெலிவரி ஆப்கள் கோலோச்சும் காலம் என்பது இதன் மூலம் தெள்ளத்தெளிவாக விளங்குகிறது.
முந்தைய பதிவுகள்:
சமூக ஊடகங்களில் பின் தொடர