Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Saturday, 30 December 2017

அரசியலில் களமிறங்கும் ரஜினிகாந்த்?


டிசம்பர் 31, 2017 ஞாயிற்றுகிழமை காலை நான் இந்த பதிவை எழுத துவங்கும்போது ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார், அவரது ரசிகர்களின் 23 ஆண்டுகால நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்திருக்கிறது, அறிவிப்பு வந்தவுடன் அவரது ரசிகர்கள் இனிப்பு கொடுத்து பட்டாசு வெடித்து கொண்டாட துவங்கிவிட்டனர். எந்த ஒரு கட்சியோடும் இணையாமல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சியை துவங்கி  234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு ஆட்சியை பிடிப்போம் என்ற முடிவை ரசிகர்கள் மத்தியில் அறிவித்துள்ள ரஜினிகாந்த் இப்போது அரசியல் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க வேண்டாம் அதை விமர்சிக்க எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன என்று ரசிகர்களுக்கு கட்டளையிட்டுள்ளார். 

அரசியலுக்கு வருவதென்றால் வெற்றி பெற வேண்டும், வீரமும் விவேகமும் வேண்டும் என்று சொல்லி வந்த ரஜினிகாந்த்,  இந்த ஆண்டு அவரது இரண்டு திரைப்படங்கள் வெளிவர தயாராகி கொண்டிருக்கும் நிலையில் மிக கவனமாக எந்த கட்சியையும் நேரடியாக தாக்காமல் பொதுவாக இன்றைய அரசியல் குறித்த தன் பார்வையை தெளிவுபடுத்தி இருப்பதன் மூலம் வீரத்தோடு விவேகமாகவும் தன் முதல் அடியை ரஜினிகாந்த் அரசியலில் எடுத்து வைத்துள்ளார். தமிழக அரசியலில் இதுவரை ஆட்சியில் இருந்த இரண்டு திராவிட கட்சிகளின் பெரும் தலைவர்களில் ஒருவர் மறைந்து விட்டார், இன்னொருவர் உடல்நலமில்லாமல் இருக்கிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த்த்தின் அரசியல் பிரவேசம் நிகழ்ந்திருக்கிறது. அவர் அரசியலில் களமிறங்கும் அறிவிப்பு வந்த சில மணி நேரத்திலேயே அந்த அறிவிப்பை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்களிடம் இருந்து அறிக்கைகளும், பேட்டிகளும் வர துவங்கிவிட்டது. 

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை வரவேற்கும் கமல்ஹாசனின் ட்வீட்


கடந்த ஒரு ஆண்டு காலத்தில் தமிழக அரசியலில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து தன் வேதனையை தெரிவித்துள்ள ரஜினிகாந்த், சிஸ்டத்தை சரி செய்வதற்கு தயாராகி விட்டார் என்று தெரிகிறது, அரசியல்வாதிகள் ஊழல் செய்கிறார்கள், ஆட்சிக்கு வரும் கட்சிகள் கொள்ளையடிக்கிறார்கள் என்று கவலைபட்டிருக்கும் ரஜினிகாந்த் கெட்டு போயிருக்கும் சிஸ்டத்தை சரி செய்ய வேண்டுமென்றால் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மக்களும்  ஒத்துழைக்க வேண்டும் என்பது ரஜினிகாந்துக்கும் தெரிந்திருக்கும். ஆனால் இப்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையில் மக்கள் ஒரு கட்சி வேட்பாளருக்கு ஒட்டு போட வேண்டுமென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர் தங்கள் தொகுதிக்கு என்ன நன்மை செய்வார், மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பாரா? தீர்வு காண்பாரா? என்றெல்லாம் சிந்தித்து ஒட்டு போடுவதில்லை மாறாக ஒட்டு போடுவதற்கு எந்த கட்சி வேட்பாளர் எவ்வளவு கொடுப்பார் என்று எதிர்பார்க்கும் கேவலமான சூழ்நிலை உருவாகியுள்ளது அல்லது அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்டு விட்டது. மக்களும் ஊழலுக்கு பழக்கப்பட்டு போய் விட்டனர், பணம் கொடுத்தால் தான் வாக்குச்சாவடிக்கு மக்கள் ஒட்டு போட வருவார்கள் என்ற அவல நிலை வந்துவிட்டது, நேர்மையாக அரசியல் செய்ய விரும்பிய ஒரு சில அரசியல் தலைவர்கள் இன்றைக்கு என்ன நிலையில் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும், தன்னுடைய மந்திரம் உண்மை, உழைப்பு, உயர்வு என்று தெரிவித்துள்ள ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேசத்தை வந்தாரை வாழ வைக்கும் தமிழக மக்கள் வரவேற்பார்களா? அவர் கொண்டு வர விரும்பும் அரசியல் மாற்றத்தை மக்களும் விரும்புவர்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்...  
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 21 December 2017

அமெரிக்காவில் விமர்சிக்கப்படும் டிஸ்னி தயாரித்த டிரம்ப் ரோபோ


சிறுவர்களுக்கான கார்ட்டூன் திரைப்படங்கள், சீரியல்கள் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னி அமெரிக்க அதிபர்களின் உருவங்களை ஆடியோ அனிமேட்ரானிக்ஸ் முறையில் செய்து அவற்றை மக்கள் பார்வைக்கு ஹால் ஆஃப் பிரெஸிடெண்ட்ஸ் என்ற மேடை அரங்கில் மேஜிக் கிங்டம் என்ற டிஸ்னி வேல்ட் ரிசார்ட்டில் வெளியிடுவது வழக்கம், இரண்டு நாட்கள் முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருவ ரோபோ ஒன்று மேடையில் பேசுவது போன்ற காட்சியை வெளியிட்டுள்ள டிஸ்னி நிறுவனம், அந்த ரோபோவின் உருவம் மற்றும் வடிவமைப்பால் பலதரப்பட்ட விமர்சனங்களை பெற்று வருகிறது.



இந்த ரோபோவை பார்த்துவிட்டு ஒருவர் டிவிட்டரில்  "இந்த ரோபோவை செய்ய தொடங்கும்போது முன்னாள் அமெரிக்க அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளின்டனை மனதில் கொண்டு உருவாக்க தொடங்கி பின்னர் முடிக்கும் போது டிரம்ப் போல் உருவாக்கி உள்ளனர்" என்று கூறியிருக்கிறார். 

இன்னொருவர் "ஹால் ஆஃப் பிரெஸிடெண்ட்ஸில் இருப்பதிலேயே ஒல்லியான உருவத்தில் இருப்பவர் டிரம்ப் தான் ஆனால் இதை போல் டிரம்ப் ஒருபோதும்  ஒல்லியாக இருந்ததில்லை, இதை பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது" என்றிருக்கிறார். 

தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் அவ்வை சண்முகி போல், ஹாலிவுட்டில்  மிசஸ் டவுட்ஃபயர் என்ற படம் வெளிவந்தது, அந்த படத்தின் நாயகன் உருவம் போலவே டிரம்ப்பின் உருவத்தை செய்து விட்டனர் என்று ஒருவர் கூறியுள்ளார். இதே போன்று மேலும் பலரும் பல்வேறு பிரபலங்களை போல் இந்த உருவம் காட்சியளிப்பதாக கூறியுள்ளனர்.

இதற்கு முன்பு பல அமெரிக்க அதிபர்களின் உருவங்களை வெற்றிகரமாக செய்து பாராட்டு பெற்ற டிஸ்னி நிறுவனம் டிரம்ப் உருவத்தை செய்வதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் இந்த விமர்சனங்களை தவிர்த்திருக்கலாம். 

Wednesday, 13 December 2017

தெரு நாய்களின் நன்றி உணர்ச்சி


நாய் என்றவுடன் நினைவுக்கு வருவது அதன் நன்றி காட்டும் குணம் தான். மனிதர்கள் பலரிடம் இன்று அன்பும், மனிதத்தன்மையும், நன்றி உணர்ச்சியும் வெகுவாக குறைந்து கொண்டே வரும் இந்த காலத்தில் இந்த நான்கு கால் ஜீவன்களின் நன்றி உணர்ச்சி வியக்க வைக்கிறது.

நான் அப்போது வீட்டை விட்டு தனியாக பேச்சிலர் ஹாஸ்டலில் தங்கியிருந்த நாட்கள், அங்கு நாய் வளர்க்க அனுமதி கிடையாது, ஹாஸ்டலில் இருந்து வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தேன், எங்கள் ஹாஸ்டல் இருக்கும் தெருவில் கும்பலாக எட்டிலிருந்து பத்து நாய்கள் சேர்ந்து கெத்து காட்டி கொண்டிருக்கும். எப்போதாவது   வேலை    விட்டு    திரும்பும்போது     எனக்கு பசித்தால் பிஸ்கட் பாக்கெட் வாங்கி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே ஹாஸ்டலுக்கு திரும்புவேன், ஒரு சில பிஸ்கட் துண்டுகளை எங்கள் தெருவில் இருக்கும் நாய்கள் கும்பலுக்கும் போடுவது உண்டு. இந்த தெரு நாய் கும்பல்களிடம் உள்ள ஒரு குணம் இன்னொரு தெருவை சேர்ந்த நாய் தன் எல்லைக்குள் (தெருவுக்குள்) வந்துவிட்டால் கும்பலாக கூடி குரைத்து அந்த நாயை விரட்டுவது தான்.



அந்நாட்களில். எதிர்பாராத ஒரு விபத்தை சந்தித்ததால் கை கால்களில் கட்டுகளுடன் பேருந்தில் வேலைக்கு சென்று திரும்பி கொண்டிருந்தேன், ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்று கட்டுகளை மாற்றி விட்டு மீண்டும் ஹாஸ்டலுக்கு பேருந்தில் வந்து இறங்கினேன்,  பேருந்து நிறுத்தம் எங்கள் ஹாஸ்டல் இருக்கும் தெருவிலிருந்து மூன்று தெரு தள்ளி இருந்தது, அங்கிருந்து எங்கள் தெருவுக்கு நடந்து செல்ல வேண்டும், பேருந்திலிருந்து கட்டுகளோடு இறங்கியவுடன் அந்த தெருவில் இருந்த நாய்கள் (கட்டுகளோடு  இருந்த) என் வித்தியாசமான தோற்றத்தை கண்டு சூழ்ந்து  குரைத்து கொண்டு என் மேல் பாய தொடங்கின பயத்தில் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ஆனால் வினாடி நேரத்தில் காட்சி மாறியது குரைப்பு சத்தம் கேட்டு எங்கிருந்தோ ஓடி வந்த எங்கள் தெருவை சேர்ந்த நாய் கும்பல் என்னை சூழ்ந்து பாதுகாப்பு வளையம் போல் நின்றன, என்னை கடிக்க வந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்த நாய்கள் சிதறி ஓடின. பேருந்து நிறுத்தத்தில் இருந்து எங்கள் ஹாஸ்டல் வரை என்னை (பாதுகாப்பாக சூழ்ந்து கொண்டு) விட்டுவிட்டு தான் திரும்பின. 

கொஞ்சம் யோசித்து பார்த்தால் நான் எங்கள் தெருவை சேர்ந்த அந்த நாய் கும்பலுக்கு எப்போதோ சில முறை பிஸ்கட்டுகள் போட்டிருக்கிறேன், அவ்வளவு தான், ஆனால் அதை நினைவில் வைத்து கொண்டு ஆபத்தான நேரத்தில் எனக்கு உதவிய இந்த தெரு நாய்களின் அன்பும், நன்றி உணர்ச்சியும் வியக்க வைக்கிறது. 

Wednesday, 6 December 2017

எளிமையான முறையில் நடைபெற்ற ஒரு அரசியல்வாதி மகனின் திருமணம்


ந்தியாவில் உள்ள ஒரு மாநிலத்தின் மந்திரியின் மகனுக்கு திருமணம் என்றால் அதற்கு எவ்வளவு பிரம்மாண்டமாக ஏற்பாடுகள் நடக்கும். ஆனால், பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் பதவி வகிக்கும் சுஷில்குமார் மோடியின் மூத்த மகன் உத்கர்ஷ் அவர்களின் திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. 

மணமகன் உத்கர்ஷ் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், மணமகள் யாமினி கொல்கத்தாவை சேர்ந்த பட்டய கணக்காளர்.  பீகாரில் உள்ள கால்நடை மருத்துவகல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த திருமணத்தில் விருந்தினர்களை மகிழ்விக்க இசை நிகழ்ச்சிக்கு பதில் வரதட்சணை ஒழிப்பு பிரசார பாடல்கள் பாடப்பட்டது. 350 க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் தங்கள் திருமணத்திற்க்கு அல்லது தங்கள் மகன்/மகள் திருமணத்திற்காக வரதட்சணை கேட்கவும், கொடுக்கவும் மாட்டோம் என்று உறுதிமொழி எடுத்து கொண்டனர்.    



விருந்தினர்களுக்கு பெரும் உணவு விருந்துக்கு பதில் உடல் உறுப்பு தானம் செய்யும் தொண்டு நிறுவனம் ஒன்றின் சார்பில் உடல் உறுப்பு தானத்துக்காக பதிவு செய்யும் கவுன்டர்கள் திறக்கபட்டிருந்தது. திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களில் 150 க்கும் மேற்பட்டோர் இறப்புக்கு பின் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு இந்த கவுன்டர்களில் பதிவு செய்து கொண்டனர்.   


பெரும் உணவு விருந்து இல்லாவிட்டாலும் திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு நான்கு லட்டுகள் அடங்கிய பாக்கெட்டும், சூடான தேநீரும் வழங்கப்பட்டது. லட்டுகள் அடங்கிய பாக்கெட்டில் சாப்பிட்ட பின் பாக்கெட்டை குப்பை தொட்டியில் போட சொல்லும் "ஸ்வச் பாரத்" வாசகங்கள் பிரிண்ட் செய்யபட்டிருந்தது. 

ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் : இது போன்ற வரதட்சணை வாங்காத எளிய முறையில் நடக்கும் திருமணங்கள் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும், இதை போன்ற எளிய முறையில் திருமணங்கள் இனி ஹரியானாவிலும் நடத்த அரசு உதவும் என்று கூறியுள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் அமைதியான முறையில் நடந்த இந்த திருமணத்தை  வரவேற்றுள்ளார், (திருமணம் என்றாலே பாண்ட் வாத்தியங்களின் சத்தத்தால் காது செவிடாகி விடும் அனால் இந்த திருமணம் அந்த சத்தமில்லாமல் அமைதியாக நடைபெற்றதை அவர் சுட்டிக்காட்டினார்)

திருமணம் முடிந்த பிறகு சுஷில்குமார் மோடி திருமணத்துக்கு வந்திருந்த விருந்தினர்களிடம் பெரும் ஆடம்பர செலவு வைக்காத, இதை போன்ற வரதட்சணை வாங்காத, எளிமையான திருமணங்களை நடத்த சொல்லி  வேண்டுகோள் வைத்தார். 

Sunday, 3 December 2017

கலையழகு மிளிரும் பகுதியாக மாறிய மீன் சந்தை

மும்பை நகரத்தில் உள்ள  142 வருட பழமையான, மிக பிரபலமான மீன்கள் விற்கும் சந்தை பகுதி  சாசூன் டாக். இந்த பகுதிக்கு இப்போது கலை ஆர்வம் கொண்ட மக்கள் படையெடுத்து கொண்டிருக்கிறார்கள். கொல்லன் பட்டறையில் ஈக்களுக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? மீன்கள் வாசம் வீசும் இந்த பகுதியில் இப்போது தெரு ஓவியங்களால் பெயிண்ட் வாசம் வீச துவங்கி இருக்கிறது.  காலரிகளிலும், அருங்காட்சியகங்களிலும் அடைந்து கிடக்கும் கலை படைப்புகளை, கலை பற்றி ஒன்றுமே தெரியாத சாதாரண மக்களும் புரிந்து ரசிக்கும் வகையில் அவர்களும் கலை படைப்புகளை ரசிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் நடத்தப்பட்டு வரும் ஸ்டார்ட் இந்தியா (St+Art India) நிறுவனம் சாசூன் டாக்கை தங்கள் கைவண்ணத்தால் கலையழகு மிளிரும் சொர்க்கமாக மாற்றி இருக்கின்றனர். 



பெரும் கட்டிடங்களின் சுவர்களே இவர்களது ஓவியம் வரையும் களமாக உள்ளது.  ஓவியங்கள் மூலமாக மக்களுக்கு தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகளை உணர்த்தும் விதத்தில் பிளாஸ்டிக் பெருங்கடல் என்ற கலைப்படைப்பை சிங்கப்பூரை சேர்ந்த டான் சிசி என்ற படைப்பாளி உருவாக்கியுள்ளார்.  இந்த கலைப்படைப்பை பார்க்கும்போதே நாம் பிளாஸ்டிக் குப்பை கடலில் மிதப்பது போன்ற உணர்வை தருகிறது. நாம் தினசரி வாழ்கையில் பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகளான வாட்டர் பாட்டில், தேங்காய் எண்ணெய் குப்பி, உணவு பார்சல் கட்ட பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள் என்று இந்த பிளாஸ்டிக் குப்பைகளுக்கு நுகர்வோராகிய நாமும் காரணம் என்று முகத்திலறைவது போல் சொல்கிறது இவரது படைப்பு. 



இதுவரை டில்லி, பெங்களுரு, ஹைதராபாத், கொல்கத்தா நகரங்களில் ஆறு முறை இது போன்ற கண்காட்சிகளை நடத்தி இருக்கும் இந்த நிறுவனம் இதற்கு முன்பு பெங்களூரில் நடந்த கண்காட்சியில் பெங்களுரு நகரத்தின் ட்ராபிக் காரணமாக மிக மெதுவாக நகரும் வாகனங்களை குறிப்பதற்கு அந்த நகரமெங்கும் பேப்பர் நத்தைகளை வரைந்து வைத்து அந்த நகர மக்களை 
கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.



உலகம் முழுவதிலும் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் கலந்து கொண்டு தங்கள் கலை படைப்புகளை ஐம்பது நாட்களுக்கு நடத்தப்பட இருக்கும் இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம். வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மதியம் 12 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பார்வையிடலாம்.  
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்