கடந்த செவ்வாய்கிழமை அன்று மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன ஒன்னும் புரியலையா? புவியியல் சார்ந்த குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தையோ, நாட்டையோ சார்ந்த தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு வழங்கப்படும் குறியீடாகும். நம் நாட்டில் தயாரிக்கப்படும் எல்லா பொருட்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம், 2015ஆம் ஆண்டில், சென்னையில் உள்ள புவிசார் குறியீடு பதிவு அலுவலகத்தில் மேற்கு வங்க அரசின் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மற்றும் தோட்டக்கலை துறையினர் சார்பில் ரசகுல்லா தங்கள் மாநில தயாரிப்பு என்று அங்கீகாரம் (புவிசார் குறியீடு) தர சொல்லி விண்ணப்பம் செய்தனர். மேற்கு வங்க அரசு ரசகுல்லா 1868 ஆம் ஆண்டில் தங்கள் மாநிலத்தை சேர்ந்த இனிப்பு பண்டங்கள் தயாரிப்பாளரான நபின் சந்திர தாஸ் என்பவரால் தயாரிக்கப்பட்ட இனிப்பு பண்டம் என்று ரசகுல்லாவுக்கு புவிசார் குறியீடு பெற உரிமை கோரி இருந்தது. ஓடிஷா மாநிலமும் ரசகுல்லா தங்கள் மாநில தயாரிப்பு என்று இடையில் போட்டிக்கு வந்தது.
Sweet news for us all. We are very happy and proud that #Bengal has been granted GI ( Geographical Indication) status for Rosogolla— Mamata Banerjee (@MamataOfficial) November 14, 2017
இரண்டு மாநிலங்களின் விண்ணப்பங்களையும் பரிசீலித்ததில் இறுதியில் மேற்கு வங்கமே ரசகுல்லாவின் பிறப்பிடம் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வந்ததும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது எங்கள் எல்லோருக்கும் இனிப்பான செய்தி, ரசகுல்லாவுக்கு மேற்கு வங்க மாநில தயாரிப்பு என்று புவிசார் குறியீடு கிடைத்திருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் தருகிறது என்று டிவிட்டரில் ட்வீட் செய்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்
பார்த்தாலே நாவில் நீர் ஊற வைக்கும் ரசகுல்லா எப்படி செய்வது என்று பார்க்கலாமா?
ரசகுல்லா செய்முறை