இதயமும் மூளையும் இல்லாத ஒருவருக்கு சவுதி அரேபிய அரசு அந்த நாட்டின் குடியுரிமை வழங்கி உள்ளது. அந்த நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுபடி அக்டோபர் 25, 2017 முதல் சோபியா சவுதி அரேபிய நாட்டின் முதல் ரோபோ பிரஜை. ஆம், ஹன்சன் ரோபோடிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் டேவிட் ஹன்சன் என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரால் தயாரிக்கப்பட்ட ரோபோ தான் சோபியா.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளது இந்த சோபியா ரோபோ. பிரபலங்களிடம் மேடையில் பேட்டி காண்பது போல் ஒருவர் கேள்விகளை கேட்க யார் உதவியும் இல்லாமல் தானாக பதில்களை கூறியுள்ளது சோபியா ரோபோ. இந்த முறை சோபியா ரோபோ மக்களுடன் சமாதானத்தோடு வாழ்வது பற்றி பேசியுள்ளது. (இதற்கு முன்பு ஒரு முறை பேசிய போது மனித குலத்தை அழித்து விட போவதாக இதே ரோபோ பேசி அதிர்ச்சியில் ஆழ்த்தியது)
ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ப்ரோஃபஸர் ஐன்ஸ்டீன் என்ற 14 இன்ச் உயரமுள்ள சிறிய ரோபோ, ஐம்பதுக்கும் மேற்பட்ட முக பாவனைகளை வெளிபடுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மனிதர்களுக்கு உதவும் (பெர்சனல் செகரெட்டரி போன்று) விதத்தில் வடிவமைக்கபட்டது. இந்த ரோபோவிடம் வானிலை, ட்ராபிக், போன்ற தகவல்களை கேட்டு பதில் பெற முடியும்.
ப்ரோஃபஸர் ஐன்ஸ்டீன் ரோபோ அறிமுகம்
இப்போது தயாரிக்கப்பட்டுள்ள சோபியா ரோபோவால் சோகம், மகிழ்ச்சி, கோபம் உட்பட பல உணர்ச்சிகளை முக பாவனைகள் மூலம் வெளிபடுத்த முடியும், இந்த ரோபோ குட் மார்னிங் பிரிட்டன், தி டுநைட் ஷோ உட்பட சில நிகழ்சிகளில் கலந்து கொண்டு பேட்டி அளித்துள்ளது. ஆட்ரீ ஹபர்ன் என்ற பிரிட்டிஷ் நடிகையின் முக சாயலில் சோபியா ரோபோ வடிவமைக்க பட்டுள்ளது.
குட் மார்னிங் பிரிட்டன் நிகழ்ச்சியில் சோபியாவின் பேட்டி
தி டுநைட் ஷோ நிகழ்ச்சியில் சோபியா ரோபோவின் பேட்டி
முன்பு மனித குலத்தை அழித்து விட போவதாக பேசிய சோபியா ரோபோ
இப்போது தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ரோபோக்கள், இனி வருங்காலத்தில் இயற்கை பேரிடர்களின் போது மக்களை காப்பாற்றவும், உயிர் காக்கும் மருத்துவ துறையிலும் கூட பயன்படுத்த கூடிய நிலை வரலாம்.