நீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா? என்னப்பா விளையாடுறீயா? இதெல்லாம் கனவில் தான் நடக்கும் என்கிறீர்களா? கனவை நிஜமாக்கிய ஒருவரை பார்க்கலாமா? பிரேசில் நாட்டை சேர்ந்த கிலிபர் ரெனி ரிசரோ ரோச்சா நிஜமாகவே மாதக்கணக்கில் இப்படி பணகட்டுகளை தன் படுக்கைக்கு அடியில் பரப்பி வைத்து விட்டு தூங்கி உள்ளார், அது அவரை சிறையிலும் தள்ளி விட்டுள்ளது.
பணத்தை படுக்கைக்கு அடியில் பரப்பி வைத்துவிட்டு தூங்குவது குற்றமில்லை என்றபோதிலும் அவர் தூங்கியது கோடிகணக்கான மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளார். டெலக்ஸ்ப்ரீ என்ற நிறுவனத்தின் பிரமிட் ஊழல் என்று அழைக்கப்படும் ஊழலில் கோடிகணக்கான மக்களை தொலை தொடர்பு இணைப்பு வழங்க போவதாக கூறி கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ஊழல் செய்துள்ளனர். அமெரிக்காவில் நடந்துள்ள இந்த ஊழலில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கார்லோஸ் வான்செலர் ஊழல் விவகராம் வெளியில் தெரிய வந்ததும் தன் தாய் நாடான பிரேஸில் நாட்டுக்கு தப்பி சென்று விட்டார். துணை நிறுவனரான ஜேம்ஸ் மெரில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு இப்போது தண்டனைக்காக காத்து கொண்டுள்ளார்.
இப்போது சிக்கியுள்ள கிலிபர் ரெனி ரிசரோ ரோச்சாவின் வீட்டில் இருந்து இதுவரை 17 மில்லியன் டாலர் பணத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.