Recent Slider

Smiley face
----------------------------- * டேட்டா சேமிப்புக்கு: தமிழர் டைம்ஸ் மின்னிதழை மொபைலில் படிக்க - தமிழர் டைம்ஸ் + இங்கு கிளிக் கிளிக் செய்க * தமிழர் டைம்ஸ் மின்னிதழ் இப்போது முற்றிலும் புதிய வடிவத்தில் பார்க்க இங்கு கிளிக் செய்யவும் --- Thamilar Times Online Magazine Now Available in New Look - Click Here ---------------------------------------------------------

திங்கள்தோறும்

மாணவர் டைம்ஸ்

படியுங்கள்

செவ்வாய்தோறும்

மகளிர் டைம்ஸ்

படியுங்கள்

புதன்தோறும்

இளைஞர் டைம்ஸ்

படியுங்கள்

வியாழன்தோறும்

டெக் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

ஹெல்த் டைம்ஸ்

படியுங்கள்

வெள்ளிதோறும்

வணிகர் டைம்ஸ்

படியுங்கள்

சனிதோறும்

டைம்ஸ் உலகம்

படியுங்கள்

சனிதோறும்

நகைச்சுவை டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சினிிமா டைம்ஸ்

படியுங்கள்

ஞாயிறுதோறும்

சுற்றுலா டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கோல்டன் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

கிரைம் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

லோக்கல் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

உங்கள் டைம்ஸ்

படியுங்கள்

வாரந்தோறும்

டிரெண்ட்ஸ் டைம்ஸ்

படியுங்கள்

------------------------------
------------------------------

HTML Table

----------------------------------------------------------
----------------------------------------------------------
----------------------------------------------------------

Monday, 30 October 2017

சீனாவில் வளர்ந்த ராட்சத யானை பாதம்

சீனாவின் யுனான் மாகாணத்திலுள்ள டெங்சோங் நகரில் வசிக்கும் 81 வயது முதியவர் தனது வீட்டு தோட்டத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதியன்று சிறிய காளான் செடி ஒன்று முளை விட தொடங்கியதை கண்டுள்ளார். அடுத்த மூன்றே நாட்களில் இந்த காளான் செடி நாற்பது செ.மீ அகலமும்  84 செ.மீ உயரமுமுள்ள ராட்சத காளானாக (கிட்டத்தட்ட இரண்டு வயதுள்ள சிறு பிள்ளையின் உயரம்) வளர்ந்து அப்பகுதியில் வாழும் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதன் ராட்சத உருவத்தினால் ஒரே நாள் இரவில் அப்பகுதி வாழ் மக்களிடம் பிரபலமடைந்துவிட்டது.



இந்த காளானை பார்க்க வரும் பலர் இது உண்ணகூடிய விஷத்தன்மை இல்லாத காளானா? என்று கேட்கின்றனர், இது பற்றி சரியாக தெரியாததால் இந்த காளானை பறித்து யாரும் சமையலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று அறிவிப்பு பலகையை வைத்துள்ளனர்.

மக்கள் இந்த காளான் செடிக்கு அதன் வடிவத்தை பார்த்து பிரமித்து யானை பாதம் என்று பெயரிட்டுள்ளனர். இப்போது தினமும் ஆயிரகணக்கான மக்கள் இந்த காளான் செடியை காண வருகின்றனர், இந்த காளான் செடியால் இப்போது இந்த இடம் ஒரு சுற்றுலா தளம் போல் ஆகிவிட்டது.




இந்த செடியிடம் வேண்டுதல் வைத்தால் உடனே நடப்பதாக யாரோ கிளப்பி விட (ஊருக்கு ஒருத்தன் இதுக்காக இருப்பான் போல) கிராம மக்கள் சிலர் இந்த செடியிடம் வேண்டுதல்கள் எல்லாம் வைக்க தொடங்கியுள்ளனர்.

சீன அறிவியல் ஆராய்ச்சி அகடெமியை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இது ட்ரைக்ளோமா வகை காளான் என்றும் வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரகூடிய பூஞ்சை காளான் என்றும் அறிவித்துள்ளார்.



--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday, 29 October 2017

சோபியா - பேசும் ரோபோ


தயமும் மூளையும் இல்லாத ஒருவருக்கு சவுதி அரேபிய அரசு அந்த நாட்டின் குடியுரிமை வழங்கி உள்ளது. அந்த நாட்டு அரசாங்கத்தின் உத்தரவுபடி அக்டோபர் 25, 2017 முதல் சோபியா சவுதி அரேபிய நாட்டின் முதல் ரோபோ பிரஜை. ஆம், ஹன்சன் ரோபோடிக்ஸ் என்ற ரோபோ தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் டேவிட் ஹன்சன் என்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரால் தயாரிக்கப்பட்ட ரோபோ தான் சோபியா.



சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசியுள்ளது இந்த சோபியா ரோபோ. பிரபலங்களிடம் மேடையில் பேட்டி காண்பது போல் ஒருவர் கேள்விகளை கேட்க யார் உதவியும் இல்லாமல் தானாக பதில்களை கூறியுள்ளது சோபியா ரோபோ. இந்த முறை சோபியா ரோபோ மக்களுடன் சமாதானத்தோடு வாழ்வது பற்றி பேசியுள்ளது. (இதற்கு முன்பு ஒரு முறை பேசிய போது மனித குலத்தை அழித்து விட போவதாக இதே ரோபோ பேசி அதிர்ச்சியில் ஆழ்த்தியது)

ஹன்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தின் முந்தைய தயாரிப்பான ப்ரோஃபஸர் ஐன்ஸ்டீன் என்ற 14 இன்ச் உயரமுள்ள சிறிய ரோபோ, ஐம்பதுக்கும் மேற்பட்ட முக பாவனைகளை வெளிபடுத்தும் விதத்தில் உருவாக்கப்பட்டது. இந்த ரோபோ மனிதர்களுக்கு உதவும் (பெர்சனல் செகரெட்டரி போன்று) விதத்தில் வடிவமைக்கபட்டது. இந்த ரோபோவிடம் வானிலை, ட்ராபிக், போன்ற தகவல்களை கேட்டு பதில் பெற முடியும். 

 ப்ரோஃபஸர் ஐன்ஸ்டீன் ரோபோ அறிமுகம்

இப்போது தயாரிக்கப்பட்டுள்ள சோபியா ரோபோவால் சோகம், மகிழ்ச்சி, கோபம் உட்பட பல உணர்ச்சிகளை முக பாவனைகள் மூலம் வெளிபடுத்த முடியும், இந்த ரோபோ குட் மார்னிங் பிரிட்டன், தி டுநைட் ஷோ உட்பட சில நிகழ்சிகளில் கலந்து கொண்டு பேட்டி அளித்துள்ளது. ஆட்ரீ ஹபர்ன் என்ற பிரிட்டிஷ் நடிகையின் முக சாயலில் சோபியா ரோபோ வடிவமைக்க பட்டுள்ளது.

குட் மார்னிங் பிரிட்டன் நிகழ்ச்சியில் சோபியாவின் பேட்டி 

தி டுநைட் ஷோ நிகழ்ச்சியில் சோபியா ரோபோவின் பேட்டி


முன்பு மனித குலத்தை அழித்து விட போவதாக பேசிய சோபியா ரோபோ



இப்போது தொழிற்சாலைகள், அலுவலகங்களில் பயன்படுத்தப்பட்டு வரும் ரோபோக்கள், இனி வருங்காலத்தில் இயற்கை பேரிடர்களின் போது மக்களை காப்பாற்றவும், உயிர் காக்கும் மருத்துவ துறையிலும் கூட பயன்படுத்த கூடிய நிலை வரலாம்.
--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Tuesday, 24 October 2017

17 மில்லியன் டாலர் பணத்தின் மேல் படுத்து தூங்கியவர்

நீங்கள் எப்போதாவது உங்கள் படுக்கை முழுவதும் பண கட்டுகளை நிரப்பி வைத்து விட்டு அதன் மேல் படுத்து தூங்கி இருக்கீறீர்களா? என்னப்பா விளையாடுறீயா? இதெல்லாம் கனவில் தான் நடக்கும் என்கிறீர்களா? கனவை நிஜமாக்கிய ஒருவரை பார்க்கலாமா? பிரேசில் நாட்டை சேர்ந்த கிலிபர் ரெனி ரிசரோ ரோச்சா நிஜமாகவே மாதக்கணக்கில் இப்படி பணகட்டுகளை தன் படுக்கைக்கு அடியில் பரப்பி வைத்து விட்டு தூங்கி உள்ளார், அது அவரை சிறையிலும் தள்ளி விட்டுள்ளது. 



பணத்தை படுக்கைக்கு அடியில் பரப்பி வைத்துவிட்டு தூங்குவது குற்றமில்லை என்றபோதிலும் அவர் தூங்கியது கோடிகணக்கான மக்களை ஏமாற்றி சம்பாதித்த பணத்தில் என்பதால் கைது செய்யப்பட்டுள்ளார். டெலக்ஸ்ப்ரீ என்ற நிறுவனத்தின் பிரமிட் ஊழல் என்று அழைக்கப்படும் ஊழலில் கோடிகணக்கான மக்களை தொலை தொடர்பு இணைப்பு வழங்க போவதாக கூறி கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ஊழல் செய்துள்ளனர். அமெரிக்காவில் நடந்துள்ள இந்த ஊழலில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கார்லோஸ் வான்செலர் ஊழல் விவகராம் வெளியில் தெரிய வந்ததும் தன் தாய் நாடான பிரேஸில் நாட்டுக்கு தப்பி சென்று விட்டார். துணை நிறுவனரான ஜேம்ஸ் மெரில் குற்றவாளி  என்று நிரூபிக்கப்பட்டு இப்போது தண்டனைக்காக காத்து கொண்டுள்ளார்.



இப்போது சிக்கியுள்ள கிலிபர் ரெனி ரிசரோ ரோச்சாவின் வீட்டில் இருந்து இதுவரை 17 மில்லியன் டாலர் பணத்தை காவல் துறையினர் மீட்டுள்ளனர். 
----------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Monday, 23 October 2017

நம்பிக்கை துரோகம் - மீண்டு வருவது எப்படி?

இந்த காலத்தில் எவ்வளவு தான் நாம் யாரிடமும் ஏமாறாமல் எச்சரிக்கையாக இருந்தாலும் சில நேரங்களில் நாம் மிகவும் அன்பு வைத்து நம்பி இருப்பவர்கள் (நண்பர்கள், உறவினர்கள் என்று நாம் நினைத்திருப்பவர்கள் ) நம் முதுகில் குத்தி நமக்கு எதிராக தீமை செய்யும் போது உடைந்து போய் விடுவது இயல்பு, ஆனால் அந்த நிலையிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வந்தால் தான் வெற்றிகரமாக வாழ்க்கை நடத்த முடியும், நம்பிக்கை துரோகத்திலிருந்து - மீண்டு வருவது எப்படி? என்று விளக்கும் காணொளி காட்சி.

Sunday, 22 October 2017

சாதி வெறி பிடித்த மனித மிருகங்கள்

சாதி வெறி பிடித்த மனித மிருகங்களின் கொட்டம் என்று அடங்குமோ தெரியவில்லை, பீகார் மாநிலத்திலுள்ள நாளந்தா நகரத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த சவர தொழிலாளியான ஐம்பத்து நான்கு வயதாகும் மகேஷ் தாகூர், ஊர் தலைவரான சுரேந்திர யாதவின் வீட்டுக்குள் கதவை தட்டாமல் சென்றதால் அவரை எச்சிலை துப்ப செய்து அதை நக்க வைத்த அசிங்கம் நடந்துள்ளது. அந்த ஊர் பெண்களை கொண்டு அவரை செருப்பால் அடிக்கவும் செய்துள்ளனர். இந்த சம்பவம் நடந்தது பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமாரின் சொந்த ஊர் நாளந்தாவில் என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் குறித்து விசாரிக்க அந்த மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார். நிச்சயமாக தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்று கூறியுள்ள பீகார் மாநில அமைச்சர் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இனி இப்படி நடக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

Tuesday, 17 October 2017

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பு வாசகர்களுக்கு தமிழர் டைம்ஸின்  
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

Monday, 16 October 2017

உலகத்தை (இப்போது பெங்களுரு மாநகரை) புரட்டியெடுக்கும் பேய் மழை

இரண்டு வருடங்களுக்கு முன் சென்னை மாநகரை பாதித்த பேய் மழை இந்த வருடம் பெங்களுரு நகரை புரட்டியெடுத்து கொண்டிருக்கிறது. பெங்களுரு மாநகர வரலாற்றிலேயே மிக அதிகமான மழை பொலிவு (165 செ.மீ ) என்று வானிலை மையம் அறிவித்துள்ளது, இந்த மழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த செய்திகள் இப்போது தான் ஓவ்வொன்றாக வெளிவர துவங்கியுள்ளது. 

 ஓடும் ஆறாக மாறிய சாலையில் மிதக்கும் கார்கள்


எகோ ஸ்பேஸ் தண்ணீரில் மிதக்கும் அலுவலகங்கள்


இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மட்டும் இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள மாநிலங்கள், நேபாள், பங்களாதேஷ் நாடுகளில் பெய்த மழையால் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்ட்ராவில் உள்ள மும்பை மாநகரமும் மழை வெள்ளத்தால் அடிக்கடி இந்த வருடத்தில் பாதிப்புக்கு உள்ளானது. தெற்கு ஆசியாவில் மட்டும் இந்த வருடத்தில் மழை வெள்ளத்தால் நாற்பத்தொரு மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு ஆசியாவில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் 


ஆசிய கண்டத்தில் மட்டும் தான் இந்த நிலையா என்று பார்த்தால்? அப்படியெல்லாம் இல்லை, அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை ஹார்வே (ஹரிக்கேன்) புயலும், ப்ளோரிடாவை இர்மா புயலும், இங்கிலாந்தில் பிரிட்டன் நகரமும், அயர்லாந்து தேசமும், ஜெர்மனி நாட்டின் பெர்லின் நகரமும் இந்த வருடத்தில் புயல் மழையால் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
ஒவ்வொரு நகரத்தையும் தாக்கும் புயல்களுக்கு பெயர் தான் மாறுகிறது, ஆனால் பாதிப்புகள் எல்லா நகரங்களிலும் பயங்கரமாகவே உள்ளது.


இந்த வருடம் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளது. இயற்கை மனிதர்களோடு தன் விளையாட்டை இத்தோடு நிறுத்தி கொள்ளுமா? இல்லை இன்னும் கொல்லுமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கடும் மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களை எப்படி தயாராவது அல்லது எதிர்கொள்வது என்று விளக்கும் காணொளி காட்சி

Friday, 13 October 2017

அடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார் பதிவு



# அடிச்சும் கேப்பாங்க.. அப்பவும் தராதீங்க.. ஒரு உஷார் பதிவு #

உங்கள் ஆதார் எண்ணை உங்கள் மொபைல் நம்பரோடு இணைத்து விட்டீர்களா என்ற போர்வையில் ஒரு மாஸ்டர் மைண்ட் மோசடியை நிகழ்த்தி, சுமார் 1.30 லட்சத்தை ஒரு வாலிபரின் ICICI சேலரி அக்கவுண்டில் இருந்து திருடியிருக்கிறார்கள், இதற்கும் அந்த பட்டதாரி வாலிபர் சமீபத்திய பின் நம்பர் கேட்கும் மோசடிகள், க்ரெடிட் கார்டு மோசடிகள் எல்லாவற்றையும் தெரிந்து மிக கவனமாகவே இருந்திருக்கிறார், இருந்தும் இந்த ஆதார் எண் இணைக்க வேண்டி தினசரி வரும் அழைப்புகள் போல இதுவும் இருந்ததால் ஏமாந்துவிட்டார், என்ன நடந்தது ?

“வணக்கம், ஏர்டெல்லில் இருந்து பேசுகிறோம், உங்கள் ஆதார் எண்ணை இணைத்துவிட்டீர்களா ?”

“இல்லைங்க , இன்னும் இல்லை, “

“சார்! அரசு உத்தரவுப்படி இன்னும் சில நாட்களுக்குள் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும், நீங்கள் விரும்பினால் இந்த அழைப்பின் வழியாகவே உங்கள் ஆதார் எண்ணை இணைக்கலாம், உங்களிடம் ஆதார் எண் இருக்கிறதா ?”

“இருக்கு, சொன்னா போதுங்களா, நீங்களே அப்டேட் பண்ணிடுவீங்களா ?”

“நிச்சயமாக சார், உங்களுக்கு உதவுவதற்க்காவே இந்த வசதி, உங்கள் ஆதார் எண்ணை சொல்லுங்கள்!” (ஆதார் எண்ணை சொல்கிறார்,)

“ஆதார் எண் தந்தத்திற்கு நன்றி, உங்கள் எண் இந்த மொபைல் நம்பருடன் இணைக்கப்பட்டுவிட்டது வாழ்த்துக்கள், இன்னும் நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதை செய்தால் மட்டுமே நீங்கள் தான் இந்த மொபைல் எண் உபயோகிப்பாளர் என எங்களால் உறுதி செய்துகொள்ளமுடியும்,”

"என்ன பண்ணணும்ங்க ?”

“உங்களது சிம் கார்டில் உள்ள 20 இலக்க சிம் எண்னை மெஸேஜில் SIM என டைப் செய்து ஏர்டெல்லின் 121 என்ற வாடிக்கையாளர் சேவை மைய எண்ணுக்கு அனுப்பவும், அனுப்பிய பிறகே உங்கள் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி முழுமையடையும்,”

(யோசிக்கிறார்) “மேடம் ! சிம்மு போனுக்குள் இருக்குது, அந்த நம்பர் எனக்கு தெரியாதுங்களே”

“கவலை வேண்டாம் சார், உங்கள் சிம் நம்பரை இப்போது உங்களுக்கு மெஸேஜில் அனுப்பியுள்ளேன், அதை அப்படியே 121 என்ற எங்களது சேவை மைய எண்ணிற்கு அனுப்பவும், நன்றி”

“121 க்கு தானுங்க அனுப்பனும், வேற எங்கியும் இல்லீங்களே, ஏன்னா ஊர் பூரா முடிச்சவிக்கு பசங்க புதுபுதுசா ஏமாத்தறானுக, அதான் கேக்குறங்க”

“சார், இது ஏர்டெல்லின் அதிகார பூர்வ அழைப்பு, 121 எங்களது அதிகாரபூர்வ வாடிக்கையாளர் சேவை மையம், அதற்க்கு மட்டுமே அனுப்பினால் போதும். நன்றி"

இப்படி நமக்கு ஒரு போன் வந்தா எத்தனை பேர் 121 க்கு சிம் நம்பர் அனுப்பியிருப்போம், கிட்டத்தட்ட எல்லோருமே, இல்லையா !! அதே போலத்தான் இவரும் அனுப்பியிருக்கிறார், அனுப்பிய சிலமணிநேரங்களில் இவரது அக்கவுண்டில் இருந்து தொடர்ந்து 10000 , 20000 என சரமாரிக்கு பணம் உருவப்பட்டு, இவர் சேர்த்து வைத்திருந்த Fixed Deposits உட்பட 1.30 லட்சங்களை மொத்தமாக 18 மணி நேரத்தில் அபேஸ் பண்ணிவிட்டார்கள், ஐயோ, இதெப்படி சாத்தியம் என்கிறீர்களா, சாத்தியமே !!
உங்கள் வங்கி கணக்குகளின் இணைய சேவை பாஸ்வேர்ட் மாற்றுவது, ஏடிஎம் பின் நம்பர் மாற்றுவது, புதிய அக்கவுண்டகளை இணைத்தல், பண பரிமாற்றம் என எதை இணைத்தாலும், மாற்றினாலும் அவை எல்லாமே ஒன்றே ஒன்றை அடிப்படையாக கொண்டே மாற்ற முடியும், அது உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP, அந்த OTP யை பெற்றே மேற்சொன்ன மோசடியை நிகழ்த்தியிருக்கிறார்கள், எப்படி ?

ஏர்டெல் 3G யில் இருந்து 4G சிம்முக்கு உங்கள் எண்னை மாறுங்கள், ப்ரீ ப்ரீ என ஊர் பூரா கூவி கொண்டிருக்கிறது, இதற்காக ஒரு சேவையை தொடங்கியது, வாடிக்கையாளருக்கு இலவசமாக 4G சிம் கார்டுகளை தர தொடங்கியது, அவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான், SIM என டைப் செய்து 20 இலக்க புது சிம் எண்னை 121 க்கு அனுப்பிவிட்டால் இரண்டு மணிநேரத்தில் புதிதாக தரப்பட்ட 4G சிம்மில் உங்கள் நம்பர் ஆக்டிவேட் ஆகிவிடும், பழைய சிம்மை தூக்கி போட்டுவிட்டு இதை செருகி 4G தரத்தில் உபோயோகிக்கலாம், இந்த சேவையை தான் இந்த திருடர்கள் உபயோகித்து கொண்டனர், ‘எனக்கு சிம் நம்பர் தெரியாதுங்க’ என்ன சொல்லியதும் அவர்கள் அனுப்பினார்கள் பாருங்கள் ஒரு சிம் நம்பர் , அது உங்கள் போனில் நீங்கள் பேசி கொண்டிருக்கும் சிம்மின் 20 இலக்க எண் அல்ல, அவர்கள் கை வசம் ஆக்டிவேட் ஆக தயார் நிலையில் உள்ள ஒரு 4G சிம். அவர்கள் அனுப்பிய மெஸேஜை 121 க்கு நீங்கள் அனுப்பியதால் சிலமணி நேரங்களில் உங்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவர்கள் சிம்மில் உங்கள் எண் ஆக்டிவேட் ஆகிவிடும், பிறகு OTP என்ன, உலகமே உங்களிடம் பேச நினைத்தாலும் எல்லா அழைப்புகளும் அவனுக்கு தான் போகும். எவ்வளவு எளிமையாக, நம்ப வைத்து ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்!

மேற்சொன்ன மோசடியில் முதல் 3000 உருவப்பட்ட போதே ICICI க்கு சொல்லி அக்கவுண்ட்டை தற்காலிகமாக முடக்க சொல்லியிருக்கிறார் இளைஞர், ஆனால் ICICI தேமே என 18 மணிநேரம் தேவுடு காக்க, அதற்குள் மொத்த வைப்பு தொகையையும் சுருட்டிவிட்டார்கள் ,இந்த மாதிரி நூதன, எளிமையான, மிக மிக நம்பிக்கை தரும் வகையில் நீங்களும் ஏமாற்றப்படலாம், எக்காரணம் கொண்டும் OTP எண், PIN நம்பர் போன்றவைகளை யாரிடமும் பகிராதீர்கள், மோசடி பேர்வழிகளிடம் இருந்து,கவனமாக உங்கள் கையிருப்பை காத்திடுங்கள். நன்றி.

நன்றி: Hariharasuthan Thangavelu Facebook Post
----------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 11 October 2017

வைரல் ஆன வீடியோவால் வேலையிழந்த ஆசிரியை

சமீபத்தில் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒரு பள்ளி சிறுவன் தன் ஆசிரியையிடம் பேசும் வீடியோ (அந்த சிறுவன் ஆசிரியையிடம் அவரை பிடித்திருக்கிறது என்றும் அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் சொல்லும் வீடியோ) பதிவிடப்பட்டது விளையாட்டுத்தனமாக  எல்லோரும் அந்த வீடியோவை பகிர தொடங்க வைரல் ஆனது. அது அந்த பள்ளி நிர்வாகத்துக்கும் எட்டியது. விளைவு, இப்போது பள்ளி நிர்வாகத்தால் அந்த ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுவனின் தந்தை இந்த சம்பவம் குறித்து விளக்கம் சொல்லி வருத்தம் தெரிவிக்கும் காட்சி இப்போது வெளியாகி உள்ளது. விளையாட்டு வினையாகும் என்று சொல்வார்கள், ஆசிரியை விஷயத்தில் நிஜமாகவே விளையாட்டு வினையாகிவிட்டது. 

இந்த வீடியோவை பார்த்த பிறகாவது பள்ளி நிர்வாகம் தவறை மன்னித்து ஆசிரியரை திரும்ப வேலைக்கு சேர்த்து கொள்ளலாம்.

பள்ளி சிறுவனின் தந்தை விளக்கம் சொல்லி வருத்தம் தெரிவிக்கும் காட்சி

--------------------------------------------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday, 6 October 2017

நேர மேலாண்மை

ஒரு சிலர் பல வேலைகளை இழுத்து போட்டு கொண்டு செய்வார்கள் 

ஆனாலும் அந்த நாள் முடிவில் பார்த்தால் ஒரு வேலையும் முழுமையாக 

முடிந்திருக்காது அல்லது ஏதாவது ஒரு வேலை செய்யாமல் மறந்து 

போயிருப்பார்கள், இன்னும் சிலருக்கு சில வேலைகள் கடைசி 

நிமிடத்தில் தான் நினைவுக்கு வரும், எப்படியாவது இன்றைக்குள் இதை 

செய்து முடிக்க வேண்டும் என்று அரக்க பறக்க ஓடுவார்கள். சரியாக 

எல்லா வேலைகளையும் திட்டமிட்டு செய்வதின் மூலம் இந்த 

அவஸ்தைகளை தவிர்க்கலாம், எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள 

கானொளியில் காணுங்கள்...


Thursday, 5 October 2017

ஒரு வாரம் ஒரு தேசம்

இந்த வாரம் வடகொரிய தேசம் குறித்த அதிர வைக்கும் பத்து 

உண்மைகள், தலையில் வளரும் முடியிலிருந்து உண்ணும் உணவு, 

உபயோகிக்கும் மின்சாரம் என்று சகலமும் ஒரு தனி மனிதனின் 

கட்டுபாட்டில், யோசித்து பார்த்தால் நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தின் அருமை பெருமை புரியும்.

Wednesday, 4 October 2017

நிழலும் நிஜமும்

தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கி வெளிவந்த முதல்வன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிகர் அர்ஜுன் ஒரு நாள் முதல்வராக இருப்பார், அப்போது தங்கள் கடமையை சரிவர செய்யாத ஊழியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்வது போல் காட்சிகள் அந்த திரைப்படத்தில் வைத்திருந்தார். கீழே நீங்கள் பார்க்கும் காணொளி கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அரசாங்க மருத்துவமனைக்கு ஆய்வுக்காக சென்ற போது மருத்துவமனை அலுவலகத்தில் வேலை நேரத்தில் கம்ப்யுட்டரில் திரைப்படம் பார்த்து கொண்டிருந்த ஊழியருக்கு நேர்ந்தது இது...

Tuesday, 3 October 2017

பிரபலத்தின் பிள்ளையென்றால்?

பிரபல இந்தி திரைப்பட  பாடகர் உதித் நாராயணனின் மகன் இண்டிகோ ஏர்லைன்ஸ் சேவை பிரிவில் பணிபுரிபவரிடம் காரசாரமாக வாக்குவாதம் செய்யும் காட்சி தான் கீழே பகிரபட்டுள்ளது, தன் நண்பர்களுடன் சேர்ந்து அவர் எடுத்து வந்திருந்த லக்கேஜ் சுமை விமான நிறுவனத்தால் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கவே அவரிடம் விமான நிறுவன பணிப்பெண் கூடுதல் எடைக்கு ரூபாய் பத்தாயிரம் அதிகம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார், அந்த தொகையை செலுத்த முடியாது என்று மறுத்து வாக்குவாதம் செய்த பாடகரின் மகன் ஆனந்த் நாராயணன் சமாதானம் செய்ய வந்த இன்னொரு ஆண் பணியாளரிடம் தரக்குறைவான முறையில் பேசியுள்ளார், நான் யார் தெரியுமா? மும்பை சென்று இறங்கியவுடன் நான் யார் என்று உனக்கு காண்பிக்கிறேன் நான் உன் ........யை கழற்ற வைக்காவிட்டால் என் பெயர் உதித் நாராயணன் இல்லை என்று. மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

ஒரு பிரபலத்தின் பிள்ளை என்பதற்காக விமான நிறுவன விதிமுறைகளை மதிக்காமல் செயல்படலாமா? அப்படி விதிமுறைகளை மீறும்போது விமான நிறுவன பணியாளர்கள் விதிமுறைகள் குறித்து விளக்க முயற்சித்தால் அவர்களிடம் எப்படி வேண்டுமானாலும் கீழ்த்தரமான பாஷையில் பேசி மிரட்டலாமா? பார்க்கும் நீங்களே சொல்லுங்கள்?