இன்றைய ஸ்மார்ட்போன் யுகத்தில் வீட்டிலும் வெளியிலும் மனிதர்கள் ஒருவருடன் ஒருவர் முகம் கொடுத்து பேசி கொள்வது என்பதே அரிதாகி விட்டது. சிறியவர் பெரியவர் என்ற பேதமில்லாமல் எல்லா வயதினரையும் இந்த ஸ்மார்ட்போன் வியாதி பிடித்திருக்கிறது. விஞ்ஞானம் உலகத்தை நம் உள்ளங்கையில் கொண்டு வந்து விட்டது என்று பெருமைப்படுவதா? இல்லை வெளி உலகத்தையும் சொந்தங்களையும் முற்றிலுமாக மறக்க செய்து நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அடிமைபடுத்தி வருகிறதே என்று வேதனைபடுவதா? என்று புரியவில்லை.
இந்த நிலையில் தனித்து இருக்கும் மனிதர்களை ஒருவருடன் ஒருவர் இயல்பாக பேச வைக்க ஒரு விமான நிறுவனம் வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளது. டச்சு நாட்டை சேர்ந்த KLM விமான நிறுவனம் பயணிகள் விமான நிலையத்தில் காத்திருக்கும் நேரத்தில் அவர்களை ஒருவருடன் ஒருவர் பேச வைப்பதற்கு ஒரு வட்ட வடிவ பஃபெட் விருந்து மேஜையை தயாரித்து அதனை உயரத்தில் வைத்து விட்டு, மேஜையை சுற்றியுள்ள எல்லா நாற்காலிகளிலும் பயணிகள் அமர்ந்தால் அந்த மேஜை மெல்ல மெல்ல கீழே இறங்குவது போல் ஏற்பாடு செய்தனர், பின்னர் என்ன நடந்தது என்பதை கீழே இருக்கும் காணொளி காட்சியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இனியாவது ஸ்மார்ட்போனை கீழே வைத்து விட்டு நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்கலாமே.