உண்மையான காதல் எத்தனை சோதனை வந்தாலும், சோதனைகளை தாண்டி நிலைத்து நிற்கும், ஒரு குறிப்பிட்ட மதத்தில் திருமணம் நடக்கும் போது மணமகளும், மணமகனும் (வாழ்விலும் தாழ்விலும் எந்த சூழ்நிலையிலும் எப்போதும் உன்னோடு இருப்பேன், உன்னை பிரிய மாட்டேன்) - என்று உறுதிமொழி எடுத்து கொண்ட பின்னரே திருமணம்நடக்கும். இன்றைய காலகட்டத்தில் உப்பு பெறாத விஷயங்களுக்கு எல்லாம் தம்பதிகள் சண்டையிட்டு பிரிவதும், விவாகரத்து கோரி நீதிமன்ற படிக்கட்டு ஏறுவதும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால் ஏன்ஜலா - கிறிஸ்டியன் என்ற காதல் ஜோடி மேலே சொல்லப்பட்ட திருமண உறுதிமொழி வாசகத்தை தங்கள் வாழ்க்கையில் உண்மையாக்கி வாழ்ந்து காட்டியுள்ளனர்.
ஏன்ஜலா கிறிஸ்டியனை முதல் முறை சந்தித்த போதே இவர் மீது காதல் மலர்ந்திருக்கிறது. ஏன்ஜலாவின் காதலன் கிறிஸ்டியன் நீங்கள் நினைப்பது போல் சாதாரணமான நபர் அல்ல, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் பாகங்கள் செயலிழந்த நிலையில், எஞ்சி இருக்கும் வாழ்நாளெல்லாம் படுக்கையில் அல்லது வீல் சேரில் காலத்தை கடத்த வேண்டிய நிலையில் இருக்கும் பரிதபத்திற்குரிய நபர். ஆனாலும் ஏன்ஜலா தான் காதலித்த மனிதரேயே கரம் பிடித்து வாழ்நாளெல்லாம் சேர்ந்து வாழ்வேன் என்ற உறுதியோடு இருந்திருக்கிறார்.
ஏன்ஜலா கிறிஸ்டியனை பற்றி கூறும் போது " நான் கடவுளிடம் வேண்டியதெல்லாம் என்னை உண்மையாக நேசிக்க கூடிய ஒருவரை எனக்கு துணையாக தர வேண்டும் என்பது தான், அப்படிப்பட்ட ஒருவருக்காக நான் காத்திருந்தேன், சரியான காலம் வரும்போது அவர் என்னை தேடி வந்தார், அவரை விட்டு நான் ஒருபோதும் பிரிய மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
கிறிஸ்டியன் ஏன்ஜலாவை பற்றி கூறும் பொழுது "அவள் என்னை விட்டு எந்த சூழ்நிலையும் பிரியவில்லை, எவ்வளவோ சோதனைகள் வந்த போதும் அவள் என்னை விட்டு பிரிந்து செல்ல விரும்பியதில்லை, எப்போதும் என்னோடு கூட இருந்தாள், ஒரு வேளை அவள் என்னை பிரிந்து செல்ல விரும்பினால் அவளை துரத்தி தொடந்து செல்லும் நிலையில் நானும் என் உடலும் இல்லை. எங்களுக்குள் சிறு மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகள் வந்த போதும் நான் ஒரு போதும் அவளை பிரிய விரும்பியதில்லை, அவளை பிரிந்து என்னால் வாழ இயலாது" என்று கூறியுள்ளார்.
இந்த காதல் ஜோடியின் திருமணத்தின் போது மணமகன் கிறிஸ்டியன் கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் பெருகி கொண்டே இருந்தது. ஏன்ஜலாவும் கிறிஸ்டியனை அணைத்து, முத்தம் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தினார். இந்த ஜோடியின் அன்பும் பாசமும் திருமணத்தில் கலந்து கொண்ட அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.